கம்பஹா மாவட்டத்தில் பணியாற்றும் 55 இந்தியர்களுக்கு கோவிட் தொற்று

கம்பஹா மாவட்டத்தில் பணியாற்றும் 55 இந்தியர்களுக்குக் கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் அவர்கள் யாழ். கோப்பாய் கல்வியல் கல்லூரியில் இயங்கும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் இந்தியர்களுக்கே கோவிட்த் தொற்று உறுதி செய்யப்பட்டு கோப்பாய் கோவிட் சிகிச்சை வைத்தியசாலைக்கு இன்று (20) கொண்டுவரப்பட்டனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட அனைவரும் தனியான ஒரு விடுதியிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொற்றுடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்தியர்கள் அனைவரும் ஹிந்தி மொழி மட்டுமே பேசுபவர்களாகவுள்ளனர். இவர்கள் அனைவரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர்.