நாளை முதல் நாடு முழுவதும் மதுபானசாலைகளை திறக்க அனுமதி

நாடு முழுவதும் நாளை அதிகாலை 4 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டவுள்ள நிலையில் அனுமதிப்பத்திரம் பெற்ற (F.L 4 மற்றும் F.L 22 A) மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகளில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை அடுத்து மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை,நாளை தினம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய,மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும். அதற்கமைய விசேட காரணங்களுக்கமைய மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.