இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (19-06-2021) நாட்டில் மேலும் 47 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 20 பெண்களும், 27 ஆண்களும் கோவிட்19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

30 வயதுக்கு குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 60 வயது வரையிலான வயதுடையவர்களில் 6 மரணங்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 40 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 2581 ஆக உயர்வடைந்துள்ளது.