வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 24 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் பல்வேறு குற்ற செயல்கள் மற்றும் மோசடிகளுக்கு தொடர்புடைய 24 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதை பொருள் கடத்தல் மற்றும் குற்ற செயல்களுக்கு தொடர்புடைய 11 பேரும் இதில் அடங்குவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவர்களில் 13 பேர் பிரதான போதை பொருள் வலையமைப்பை நடத்தி செல்பவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குறித்த 24 பேரையும் கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

விரைவில் அவர்களை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள போதை பொருட்களை விரைவில் அழிப்பதற்கு அவசியமான சட்டங்களை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.