திருகோணமலையில் குடும்ப தகராறில் ஆறு மாதக் குழந்தை உயிரிழப்பு!

திருகோணமலை- கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

வாளால் வெட்டியதாக கூறப்படும் சந்தேகநபரின் ஆறு மாத குழந்தை, மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரே வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.