குருநாகல் பகுதியில் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திய பலருக்கு தொற்று

குருநாகல் மாநகர சபையின் பிரதேசத்திற்கு அருகில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் பலர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

 

அத்தியாவசிய சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த அரச ஊழியர்களுக்கு எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. அவ்வாறு இரண்டு தடுப்பூசிகளும் பெற்ற நகர ஊழியர்கள் சிலர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் பெரும்பான்மையானோர் குருநாகல் நகர சபையில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.

குருநாகல் மாநகர சபை எல்லையில் வாழும் மக்களில் 90 வீதமானோர் முதலாது தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.