கட்டுப்பாடுகளுடன் நாளை திறக்கப்படும் இலங்கை

நாளை தினம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மக்கள் செயற்பட வேண்டும். அலுவலக பணிக்காக குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களே பணிக்கு அழைக்கப்பட வேண்டும். வீட்டில் இருந்து பணி செய்ய கூடியவர்கள் அவ்வாறே பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

பொது போக்குவரத்து சேவையில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கான ஏனைய சட்டங்களை அதே முறையில் பின்பற்ற வேண்டும்.

மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும். அதற்கமைய விசேட காரணங்களுக்கமைய மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க வேண்டும்.