இலங்கையில் தேங்காய்க்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் ரத்து

தேங்காய் விலை தொடர்பான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளது.

அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இந்த அதிகபட்ச விலை நிர்ணய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தின் 20(5) சரத்தின் பிரகாரம் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி தேங்காய்க்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்த அதிகபட்ச விலை நிர்ணயம் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படுவதாக நேற்று மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவி;க்கப்பட்டுள்ளது.