இலங்கையில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கலாம் – கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம்

கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்குமாறு கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோழி இறைச்சி உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக தற்போதைய விலையில் கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாது என உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

50 ரூபா விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சோளம் தற்போது, 90 முதல் 95 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் காரணமாக 430 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 550 ரூபாவுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.