கொழும்பபில் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட பகுதிகள் முடக்கம்

டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட கொழும்பு, தெமட்டக்கொடையில் அமைந்துள்ள பகுதியை தனிமைப்படுத்தவும், மேலும் சோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் சோதனைகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

டெல்டா மாறுபாட்டை கண்டறியும் பொருட்டு நாட்டின் பிற பகுதிகளில் சோதனைகளை நடத்துமாறும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு முதன்முதலில் கண்டறியப்பட்ட கொழும்பில் சோதனைகள் இன்று நடத்தப்பட்டன.

தெமட்டக்கொடையின் அரமயா வீதியில் 200 வது தோட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தநிலையில் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்ட கொழும்பில் உள்ள பகுதி முடக்கப்பட்ட நிலையில் உள்ளது.