முல்லைத்தீவில் அன்றாட நீர்த்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் – அல்லல்படும் மக்கள்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மல்லாவி- துணுக்காய் உள்ளிட்ட பகுதி மக்கள் தமது அன்றாட நீர்த்தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அல்லறுவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

சுமார் 500-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த பகுதியில் நிலவும் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்துள்ளபோதும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வறட்சி நிலையே தொடர்ந்தும் காணப்படுகிறது.

இதனால் அந்தப் பிரதேச மக்கள் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றதாகத் தெரிவித்துள்ளனர்.