இலங்கை துறைமுகத்திலிருந்து இந்தியா துறைமுகத்துக்கு சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு

இலங்கை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஹல்தியா துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த போத்துகல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.டி. டேவோன் என்ற இந்த கப்பலின் எண்ணெய் தாங்கியில் ஏற்பட்ட சேதம் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து 250 கடல் மைல் தொலைவில் இந்த கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. குறித்து தகவல் கிடைத்ததாக இந்தியக் கரையோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சுமார் 10 கிலோ மீற்றர் கடற்பரப்பில் எண்ணெய் கசிந்துள்ளது.

இந்த நிலையில், சேதமடைந்த எண்ணெய் தாங்கியில் மீதமிருந்த எண்ணெய்யை நேற்று தாங்கிக்கு மாற்ற கப்பல் பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.