கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்தில் தனிநபர் ஒருவரால் தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு

நாட்டில் தற்பொழுது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளை தனிநபர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் தொற்று நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் குறித்த பணியை இன்றையதினம் முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பிரதேசத்தில் மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள், மற்றும் பொலிஸ் நிலையம், இராணுவ சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயல்பாட்டினை அவர் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.