யாழ்.ஸ்டான்லி வீதியில் ஆட்லொறி குண்டு மீட்பு!

யாழ்.ஸ்டான்லி வீதி வெள்ள வாய்க்காலில் வெடிக்காத நிலையில் ஆட்லொறிக் குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் .மாநகர சபையினால் யாழ்.ஸ்ரான்லி வீதியில் உள்ள வெள்ளை வாய்க்கால் தூர்வாரப்பட்டு வரும் நிலையில் குறித்த வடிகாலில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் யாழ்ப்பாண பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.