இலங்கை பெரும் ஆபத்தான நிலையில் மேலும் 51 பேர் மரணம்!

இலங்கையில் மேலும் 51 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மரணங்கள் நேற்றைய தினம் (16ம் திகதி) பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2425 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் (16-06-2021) கோவிட் காரணமாக 51 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் பதிவான மொத்த மரணங்களில் 31 ஆண்களும், 20 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

30 வயது முதல் 59 வயது வரையிலான 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 வயதுக்கும் மேற்பட்ட 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கோவிட் காரணமாக நாட்டில் இடம்பெற்றுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 2425 ஆக உயர்வடைந்துள்ளது.