வவுனியாவில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வவுனியாவில் 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு வெளியாகின.

அதில், சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு பேருக்கும், எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் ஒருவருக்கும், உக்குளாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சூடுவெந்தபுலவு பகுதியில் ஒருவருக்கும் என 13 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.