யாழ். மீசாலை பகுதியில் இராணுவ வாகனம் விபத்து

யாழ். மீசாலை பகுதியில் இராணுவத்தினரின் சிறியரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த இராணுவத்தினரின் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு பாதிப்புகள் எதுவும் இல்லையெனவும் வாகனம் முன்பக்கம் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.