இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபு – கொழும்பில் ஐவர் அடையாளம்

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா திரிபுடன் ஐந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட பகுதியில் கோவிட் தொற்று ஏற்பட்டிருந்த ஐந்து பேருக்கே இந்த திரிபு ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது தற்போது இலங்கையில் பரவிவரும்  திரிபை காட்டிலும் 50 மடங்கு வேகத்தில் பரவக்கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

இதற்கு முன்னதாக டெல்டா கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்ட இருவர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

இதேநேரம், பிரித்தானியாவின் அல்பா கொரோனா வைரஸ் திரிபு தொற்றுறுதியான 8 பேர், காலி, மட்டக்களப்பு, கொழும்பு – 6, கொழும்பு – 8 மற்றும் கொழும்பு – 10 ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளனர்.