இலங்கையில் கடந்த 15ஆம் திகதி வரை பதிவாகியுள்ள கோவிட் மரணங்கள்

இலங்கையில் கடந்த 15ஆம் திகதி வரை மாத்திரம் 890 கோவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளதை அரசாங்க தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 31ஆம் திகதி வரை இலங்கையில் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1484 ஆக காணப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி அந்த எண்ணிக்கை கடந்த 15 ஆம் திகதியுடன் 2374 ஆக அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் மாத்திரம் இலங்கையில் 806 கோவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் கோவிட் காரணமாக அதிகளவான மரணங்கள் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்குள் பதிவாகியதுடன் 101 மரணங்கள் கடந்த 11 ஆம் திகதி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.