இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு… !!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று (1) வரை இலங்கையில் 690 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, 521 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
வைரஸால் பாதிக்கப்பட்ட கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த 5 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.நாச்சிக்குடா கடற்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.நேற்றுவரை, வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 296 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, ஏப்ரல் 22ஆம் திகதி முதல் இன்றுவரை நாட்டில் 379 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நேற்று 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 18 பேர் வெலிசறை கடற்படை முகாமில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.