கிளிநொச்சி – புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை தேடும் பணி தீவிரம்

கிளிநொச்சி – புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை தேடும் பணி  தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார்.

நேற்று பிற்பகல் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் அதன் போது அவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாகவும் அயலில் உள்ள மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரமாகத் தேடியும் அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் அருமைநாதன் (வயது 40) என்று தெரியவந்துள்ளது.