தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா – கற்குளி பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர் இன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் உட்பட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.


இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த அவரை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.இதன்போது அவர் கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது.கற்குழி பகுதியை சேர்ந்த கணேசன் இளங்குமரன் (வயது 51) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை உயிரிழந்த குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.