பிரியா நடேசன் குடும்பம் பேர்த் நகருக்கு மாற்றம் !

கிறிஸ்மஸ் தீவில் இருந்த இலங்கை தஞ்சக்கோரிக்கை குடும்பத்தை ஆஸ்திரேலியா அரசு விடுவித்துள்ளது. அவர்களின் இளைய குழந்தை மருத்துவ பராமரிப்புக்காகபேர்த் நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சிலநாட்களின் பின்னர் இந்த முடிவை ஆஸ்திரேலியா அரசாங்கம் எடுத்துள்ளது.

குடியேற்ற நிலை தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது குடும்பம் இப்போது பேர்த்தில் ஒன்றாக வாழ அனுமதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது .
நான்கு வயது தர்னிகா முருகப்பன் கடந்த வாரம் பேர்த் மருத்துவமனைக்கு ரத்த நோய்த்தொற்று ஏற்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டார். குழந்தையுடன் தாயாரான பிரியா நடேசன் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்

தற்பொழுது குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக், தந்தை, நடேஸ் மற்றும் மூத்த குழந்தை 6 வயதான கோபிகா திங்களன்று பெர்த்திற்கு அனுப்பப்படுவார்கள், அங்கு அவர்கள் தர்னிகா மற்றும் தாய் பிரியாவுடன் சேருவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்

அவர்கள் பெர்த்தின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அரசாங்க “சமூக தடுப்புக்காவலில்” வாழ்வார்கள் என்றும் அங்கு அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றபொழுதிலும் , தர்னிகா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, அவர்கள் ஆஸ்திரேலிய வெளி பிரதேசமான கிறிஸ்மஸ் தீவில் உள்ள ஒரு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர், அங்கு அவர்கள் தினமும் பாதுகாப்புக் காவலர்களால் கண்காணிக்கப்பட்டனர்.

தர்னிகாவுக்கு சிகிச்சை தாமதமாகியதால் நிமோனியா நோய் உருவாக்கியதை தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக அவர் தாயாருடன் பேர்த் நகருக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சிகிச்சை தாமதம் குறித்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலியா அரசாங்கம் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.