கோவிட் மரணங்களில் இலங்கை உலகில் 9வது இடத்தில்

கோவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் மரண எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை நேற்று உலகில் 9வது இடத்திற்கு வந்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக 124 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இலங்கைக்கு மேலாக அமெரிக்கா 8வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நேற்றைய தினம் கோவிட் காரணமாக 205 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய காலத்தில் அதிகளவில் கோவிட் மரணங்கள் ஏற்பட்ட பல ஐரோப்பிய நாடுகளில் நேற்றைய தினம் இலங்கை அளவுக்கு மரணங்கள் ஏற்படவில்லை.

கோவிட் மரணங்களின் அடிப்படையில், இலங்கை ஆசிய கண்டத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆசிய கண்டத்தில் இலங்கையை விட இந்தியா மற்றும் இந்தோனேசிய ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.

கோவிட் மரணங்கள் உட்பட அது தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிடும் வேல்ட் மீற்றர் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.