மன்னார் வங்காலை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேறிய ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் வங்காலை கடற்கரை மற்றும் சிலாபத்துறை கடங்கரை போன்ற இடங்களில் கரையொதுங்கியிருந்தன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஓடுகள் கடுமையாக சிதைவுற்ற நிலையில் உயிரிழந்த கடலாமையொன்று வங்காலை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

கடந்த வாரம் சிலாபத்துறை கடற்கரையிலும் உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று