யாழில் 27 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று திங்கட்கிழமை 230 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். மாநகர சபை எல்லைக்குள் 06 பேரும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், யாழ். போதனா வைத்தியசாலையில் 02 பேரும் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும், பூநகரி சுகாதார வைத்தியசாலை அதிகாரி பிரிவில் 03 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.