இலங்கையில் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளிவந்த தகவல்

இலங்கையில் ஒவ்வொரு 100 பேரில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாகவும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோரில் ஒரு வீதத்தினர் மரணிப்பதாகவும் உலக நாடுகளின் கோவிட் தரவுகளை வெளியிட்டு வரும் “வேர்ள்ட் மீற்றர்” இணையத்தளம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து இந்த வாரத்தில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.