மனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பை பற்றிய தகவல்கள் !

நமது இந்திய புராணங்களில் பல புனைவுகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் நாகங்கள் என கூறப்படும் பாம்புகள் பற்றி பல விசித்திரமான விஷயங்களும் இருக்கின்றன. பாம்பை அடித்துக் கொன்றால், நமது குழந்தைகளும் பாம்பு போல பிறக்கும்.

பாம்பு தன்னை துன்புறுத்தும் நபர்களை காத்திருந்து பழிக்குப்பழி வாங்கும். தனக்கு நன்மை செய்தா, வணங்கினால் நமது துணையாக இருக்கும் என பல கதைகளில், புராணங்களில் நாம் படித்திருக்கிறோம். அதில் ஒன்று தான் இந்த மனிதனாக உருமாறும் இச்சாதாரி பாம்பும்.

இச்சாதாரி நாகம் பல உருவம் மாறும் தன்மை உடையது என இந்திய புராணங்கள் மற்றும் நாடோடி பாடல்கள் மூலம் அறியப்படும் ஓர் கூற்றாகும். முக்கியமாக இது மனித வடிவில் உருமாறும் என்ற கூற்றும் பல காலமாக நிலவி வருகிறது.
இச்சாதாரி நாகம் வைரத்தை விட விலை உயர்ந்த மாணிக்க கல்லை கொண்டுள்ளது என கூறப்படுகிறது.இந்த மாணிக்க கல்லை திருட முயன்று பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என புனைவுகள் பல காணப்படுகின்றன.

இந்த இச்சாதாரி பாம்பை மகுடி ஊதி தான் கட்டுப்படுத்த முடியும் எனவும் புனைவுகள் காணப்படுகிறது.இச்சாதாரி நாகம் பற்றிய பல காமிக் கதைகள் இருக்கின்றன. நாகராஜ் என்ற பாம்பை பற்றிய சூப்பர் ஹீரோ காமிக் கதையில் கூட இது சார்ந்டாஹ் நிறைய புனைவுகள் கூறப்பட்டுள்ளன.

துசி (Tausi) எனும் இந்தி காமிக்கில் கூட மனிதனாக உருமாறும் பாம்பை பற்றிய புனைவுகள் இருக்கின்றன. பல குழந்தை சிறுகதைகளில் இது போன்ற புனைவுகள் காணப்படுகின்றன.பாலிவுட்டில், 1954ம் ஆண்டு நாகின் என்ற படத்திலும், 1986ம் ஆண்டு ஸ்ரீதேவி நடித்த நாகினா என்ற படத்திலும், 1976ம் ஆண்டு ரீனாராய் நடித்த நாகின் என்ற படத்திலும் கூட இந்த பாம்பை பற்றிய புனைவுகள் கூறப்பட்டுள்ளன.