யாழ். குருநகர் பகுதியில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ். குருநகர் பகுதியில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குருநகர் பகுதியில் யாழ். பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வொன்றில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்கள் அனைவரையும் தனிப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.