இணையத்தின் ஊடாக பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இணையத்தில் விற்பனையாகும் பல பொருட்கள் யாரோ ஒரு நபரால் திருடப்பட்டது அல்லது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Shopping online concept – Parcel or Paper cartons with a shopping cart logo in a trolley on a laptop keyboard. Shopping service on The online web. offers home delivery.

திருடப்பட்ட பெறுமதியான கையடக்க தொலைபேசி, தங்க நகைகள், வாசனை திரவியங்கள், கண்ணாடி உபகரணங்கள் ஆகியவை குறைந்த விலையில் வழங்குவதாக இணையத்தளம் அல்லது சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரங்கள் வெளியிட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நிறுவனங்களின் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மக்கள் நடமாட்டம் குறைவான மற்றும் சீசீடீவி கட்டமைப்புகள் இல்லாத இடங்களை தெரிவு செய்துக் கொள்கின்றனர். அங்கு அவர்கள் பொருட்களை விற்பனை செய்தவுடன் காணாமல் போய்விடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் இணையத்தளம் ஊடாக பொருட்கள் கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.