இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான நிலைமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் ஒரு மணி வரையான இலங்கையின் நிலைமை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
இலங்கையில் இன்றைய தினம் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்கள் எவரும் இதுவரையில் பதிவாகவில்லை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை – 690
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை – 511
சந்தேகத்திற்கிடமானவர்கள், தற்போது வைத்தியசாலையில் கண்காணிப்பில் உள்ளவர்கள் – 179தேறியோர் மற்றும் குணமடைந்து வெளியேறியோர் – 172
இறப்புகள் – 7 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட இடைவெளியின் பின்னர், இன்றைய தினம் மாலை வரையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான எவரும் பதிவாகவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.