ரொறன்ரோவில் 60 ஆயிரம் பேருக்கான முன்பதிவு ஆரம்பம்!

ரொறன்ரோவில் அடுத்த மூன்று வாரங்களில் 60 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளுக்கான முன்பதிவுகள் தொடங்கப்படவுள்ளன.


அதன்படி ஜூன் 14ஆம் திகதி தொடக்கம் ஜூலை 4 ஆம் திகதி வரை எட்டு பாரிய தடுப்பு மருந்தேற்றல் நிலையங்களில் இந்த முன்பதிவுகள் செய்யப்படவுள்ளன.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை காலை 8 மணியில் இருந்து மாகாண முன்பதிவு முறையின் ஊடாக இதில் பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.