பொதுப்பணியில் திவாகரக்குருக்கள் பலரும் பாராட்டு !

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் பிரதம குருவாகவும் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகோற்சவ காலங்களில் கொடியேற்றும் பிரதம குருவாகவும் திகழுகின்றார். இவர் இளமையில் குருப்பட்டம் தரித்த ஆளுமை திறன் உள்ள குரு என்பதனை நாம் பல ஆலயங்களின் பார்த்திருக்கின்றோம்.நாம் பார்த்து பழகிய மனிதர்களில் இவர் நடமாடும் கடவுள். கீழ்படிந்த குணமும் புன்முறுவல் சிரிப்பும்

தளராத தன்னம்பிக்கையும் தன்னலம் பாராது இக்கட்டான இடர்காலத்திலும் பல சமூக பணிகளில் மக்களோடு மக்களாக உதவி புரியும் உத்தம மனிதர் திவாகரக்குருக்கள்.அந்தவகையிலே
கனடாவில் வசிக்கும் அன்பான நிறோஜன் அவர்களும், அவர்களோடு பணிபுரியும் நண்பர்களின் ஒரு தொகை நிதி பங்களிப்பில் மறவன்புளம் பகுதியில் வாழும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கும் இடர்கால நிவாரணம் இன்று திவாகரக்குருக்கள் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெறுமதியான உணவு பொதிகளும் அவர்களுக்கு சிறிய கைச்செலவுக்காக பணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது..
நிதிப்பங்களிப்பு வழங்கிய நிரோஜன் மற்றும் நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நாமும் தெரிவித்துக் கொள்கிறோம் …
உரிய நேரத்தில் பொருட்களை கையளித்த கார்கில்ஸ் உரிமையாளர் சுதர்ஷன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும் .

நன்றி Alvai Nesan முகநூல்