முல்லைத்தீவு சாலைபற்றைக் காட்டுப்பகுதியில் 15 மோட்டார் குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு சாலைபற்றைக் காட்டுப்பகுதியில் 15 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சாலைப்குதியில் போரின் போது கைவிடப்பட்ட 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 14, 81மில்லிமீற்றர் மோட்டார்குண்டு 1 அதற்குரிய வூஸ்டர் ஒன்றும் இன்று மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த வெடிபொருட்களைச் செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.