யாழ்ப்பாணக் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்…கொரோனாவினால் உயிரிழந்த மகன்…அதிர்ச்சியில் மாரடைப்பினால் மரணமான தந்தை!!

சுவிர்சர்லாந்தில் குடியுரிமையைக் கொண்ட யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்த நிலையில், அந்த அதிர்ச்சியினால் அவரது தந்தையும் உயரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த குணரட்ணம் கீர்த்தீபன் என்ற இளைஞன் தற்போது சுவிற்சர்லாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். சில தினங்களின் முன்னர் கொரோனால் தொற்றினால் அவர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில், சுவிற்சர்லாந்தில் வசிக்கும் அவரது தந்தையார் குணரட்ணம் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தையும் மாரடைப்பினால் உயிரிழந்ததால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.