கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் கம்பஹா பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி அலுவலகங்களில் இணைக்கப்பட்ட குறைந்தது 20 பொலிஸ் அதிகாரிகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
கம்பஹா சுகாதார அலுவலகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 40 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 100 பேர் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.