குமார் சங்கக்காரவின் மனித நேயமிக்க செயல்; குவியும் வாழ்த்து

இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார நல்லதொரு விளையாட்டு வீரர் என்பதை தாண்டி மனித நேயமிக்க பண்புகளையும் கொண்டவர். குமார் சங்கக்காரவுக்கு இலங்கை கிரிக்கெட் மட்டுமல்ல, முழு கிரிக்கெட் உலகிலும் ஒரு நல்ல பெயர் காணப்படுகிறது.

மிக நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி ஒரு அணித்தலைவராக ஒரு சாதனை வீரராக வாழ்ந்த குமார் சங்ககார. ஓய்வு பெற்ற பின்னர் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும், மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தன்னுடைய சமூகப் பொறுப்பை வெளிக்கொண்டு வருவதில் ஒரு சமூக ஆர்வலராக குமார் சங்கக்கார மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், நாடு முழுவது முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான குமார் சங்கக்கார இலங்கையில் இரண்டாவது அலையின் போது அவர் முதலாவதாக மக்களை தேடிச்சென்று அவர்களுக்கு உலர் உணவுகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

குமார் சங்கக்கார மக்களுக்கு அன்பளிப்பாக பொருட்கள் வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.