400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து ஈழத்தமிழரின் மிதிவண்டி பயணம்

சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர்.


குறித்த மிதிவண்டி விழிப்புணர்வு பயணமானது நாளை முதல் நாளை மறு தினம் வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த மிதிவண்டி பயணமானது ஐரோப்பா மிதிவண்டிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது.

இயற்கை வளங்களை காக்கவும், உடல் ஆரோக்கிய நலனை பேணவும், தாயகத்தில் அமைந்து கொண்டிருக்கும் இலங்கை மிதிவண்டிக் கழகத்தின் செயற்பாடுகளை வெளிப்படுத்தலுக்காவும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.