இலங்கையில் கோவிட் மரணங்கள் இரண்டாயிரமாக உயர்வு

நாட்டில் கோவிட் 19 பெருந்தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரமாக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2011ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் நாட்டில் அதிகூடிய கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்றைய தினம் மொத்தமாக 101 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதுவரையில் நாள் ஒன்றில் வெளியிடப்பட்ட அதி கூடிய கோவிட் மரணப் பதிவுகள் நேற்றைய தினம் 101 என பதிவாகியுள்ளது.