இலங்கையில் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும்- இராணுவ தளபதி அறிவிப்பு

கடுமையான சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை பயண தடையை நீக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி இந்த தீர்மானித்தை எடுத்துள்ளது.

நாட்டை திறந்தாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அத்துடன் திருமண நிகழ்வுகள், விருந்துகள் நடத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டை மீண்டும் திறப்பதற்காக அனைத்து பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட தகவல்கள் இன்றைய தினம் சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸாரால் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாக வைத்தே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.