திருகோணமலை – துவரங்காடு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் இன்று கைது

திருகோணமலை – துவரங்காடு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் நான்காயிரம் லிட்டர் கசிப்பு, ஆறாயிரம் லிட்டர் கோடா பரல்கள் கொள்கலன்கள் மற்றும் இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி ஜே எஸ் பி அத்தநாயக்க தலைமையில், உதவி பொறுப்பதிகாரி எஸ் காண்டீபன் தலைமையிலான மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.