அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்தவை சந்திக்க சென்ற உறுப்பினருக்கு கொவிட் தொற்று

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற போதே அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் வைத்து நேற்று அவருக்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனை கொவிட் தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் நேற்றைய தினம் மேலும் 2713 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.