பார்க்க தான் குழந்தை; ஆனால் சமூகவலைத்தளங்களில் ஒரு கலக்கு கலங்கி வருகிறார்

குழந்தைபோல் காட்சியளிக்கும் ஹஸ்புல்லா மாகோமெடோவ் (Hasbulla Magomedov) சமூகவலைத்தளங்களில் ஒரு கலக்கு கலங்கி வருகிறார். இவரை முதல்முறையாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். உருவத்தைப் பார்த்தால் 5 வயதுக் குழந்தை இருக்கும் உயரத்தில் இருப்பார். ஆனால் அவருக்கு வயது 18 ஆகிறது தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவின் மகச்சலா (Makhachkala) பகுதியில் வசித்து வருகிறார். ஜீன் குறைபாடு காரணமாக அவரது உருவம் பார்ப்பதற்குக் குழந்தைபோல் இருக்கிறது. ஹஸ்புல்லாவின் உயரம் மற்றும் குரலும் குழந்தைபோலவே உள்ளது. அவர் Growth Hormone குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

ஸ்போர்ட்ஸ்கீடாவில் வெளியாகியுள்ள தகவலின்படி, அவரது உயரம் ஒரு மீட்டர். 16 கிலோ எடையுடன் இருக்கிறார். இந்நிலையில் டிக்டாக்கில் பல்வேறு காமெடி கன்டென்டுகளை போட்டுவந்த ஹஸ்புல்லாவின், குழந்தைகளுடன் சண்டையிடும் வீடியோக்கள் இணைய வாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

குழந்தைகளுடன் சண்டையிடுவதுபோல் நடிப்பது, இதற்கு முன்பு மேற்கொண்ட கன்டென்டுகளைவிட அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனால், உலகம் முழுவதும் சமூகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாக இருப்பவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஹஸ்புல்லாவுக்கு, எம்.எம்.ஏ சோஷியல் மீடியா யுனிவெர்ஸ் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஹஸ்புல்லாவுக்கு ரஷ்யாவில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சமூகவலைத்தள கன்டென்டுகளுக்காக அவர் குழந்தைகளுடன் விளையாடுவதை ரஷ்ய விளையாட்டு அமைப்பான Dwarf Athletic Association கடுமையாகச் சாடியுள்ளது.

அத்துடன் ஹஸ்புல்லா விளையாட்டை கேலிப்படுத்தும் செயலில் ஈடுபடுவதாகவும், அவரின் ஒழுக்கமற்ற செயல் மற்றும் தவறான அணுகுமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.