பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! குறைய போகும் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த விலையை ஒருவருடத்திற்கு நிலையாக வைத்துக் கொள்ளும் வகையில் உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது வரையிலும் சதொசயில் பெற்றுக் கொள்ளும் உப்பின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதிக விலையில் உப்பு பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் முயற்சிப்பதில்லை என்பதனால் உப்பிற்கு நிலையான விலை விதிப்பதற்கு அவசியம்.

நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை. 100 ரூபாய்கு மேல் உப்பு விலையை அதிகரிப்பதற்கு சில தரப்பினர் முயற்சித்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.