வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்து மேலும் 55 பேருக்கு கோவிட் தொற்று

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்து மேலும் 55 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 31 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பேரும், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும், மன்னார் மாவட்டத்தில் 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 31 பேரில் 26 பேர் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.