கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மூலம் கொரோனா பரவுமா? விஞ்ஞானிகள் விளக்கம்

கொரோனாவின் பரவல் மற்றும் அபாயத்தைக் குறைக்க டாக்டர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் முக்கிய காரணியாக தடுப்பூசி உள்ளது, குறிப்பாக கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டிய சூழலில் தடுப்பூசி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

COVID-19 தடுப்பூசி கொரோனாவின் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு அபாயத்தை குறைப்பதில் பயனளிக்கும். மற்ற இடங்களில், தடுப்பூசி மக்கள் சாதாரண ‘முகமூடி இல்லாத’ வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு பாலமாகக கருதப்படுகிறது. ஆனால் அனைவருக்குள்ளும் எழும் கேள்வி என்னவெனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் தங்களால் மற்றவர்களுக்கு கொரோனா பரவுமா என்பதுதான். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

தடுப்பூசியின் செயல்திறன்

விஞ்ஞானரீதியாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து COVID-19 தடுப்பூசிகளும் இப்போது நன்கு ஆய்வு செய்யப்பட்டு நல்ல பாதுகாப்பு திறனைக் கொண்டுள்ளன, அதாவது அவை வைரஸுக்கு எதிரான உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடும், மேலும் மருத்துவமனையில் அனுமதிப்பது உள்ளிட்ட சிக்கலான அபாயங்களைக் குறைக்கலாம். அதே கொள்கைகளின் படி பார்த்தால் தடுப்பூசிகள் இதேபோல், பரிமாற்ற வீதங்களைக் குறைப்பதிலும் செயல்பட வேண்டும். இருப்பினும் இதனை ஆதரிக்க இன்னும் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் இல்லை. அறிகுறி நோய் மற்றும் மோசமான விளைவுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும்போது, பரவும் ஆபத்து இன்னும் கவலையாக உள்ளது என்பதை இது குறிக்கலாம். போதுமான ஆதாரங்களை கிடைக்காத வரை, தடுப்பூசி தானாகவே பரிமாற்றத்தையும் குறைக்காது என்று கருதுவது பாதுகாப்பானது, இதனால், தடுப்பூசி போடப்பட்ட ஒருவர் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்.

குறைக்கப்பட்ட பரிமாற்ற விகிதங்களும் தடுப்பூசியைப் பொறுத்தது

தடுப்பூசிகள் தொற்று பரவுவதை ஒரு அளவிற்கு குறைக்கக்கூடும் என்பதற்கான சிறிய ஆதாரங்களுக்காக கூட, நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு தடுப்பூசி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பொறுத்தது. ஒவ்வொரு தடுப்பூசியும் ஒவ்வொரு விதத்தில் செயல்படுகிறது. சில தடுப்பூசிகள் கடுமையான கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில தடுப்பூசிகள் தொற்றுநோய்களை முழுவதுமாகத் தடுக்க வேலை செய்கின்றன. எனவே நோய்த்தொற்று பரவுவது நீங்கள் எடுத்துக்கொள்ளும் தடுப்பூசியைப் பொறுத்தது.

காரணம் என்ன?

SARS-COV-2 வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைப் பொறுத்தவரை, வைரஸின் அறிகுறியற்ற பரிமாற்றம் தொற்றை தந்திரமானதாக மாற்றுகிறது. இது ஒப்பீட்டளவில் புதிய வைரஸாக இருப்பது மட்டுமல்லாமல், COVID-19 குறிப்பிட்ட சவால்களையும் முன்வைக்கிறது, ஏனெனில் நோய்த்தொற்று அறிகுறி மற்றும் அறிகுறியற்ற மக்கள் வழியாகவும் பரவக்கூடும். இதன் பொருள், அறிகுறிகளை வெளிப்படுத்தாத மற்றும் சோதனைக்கு உட்படுத்தாத ஒரு நபர், அமைதியாக இந்த நோயை மற்றவர்கள் மீது பரப்பலாம். கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகள், பெரும்பான்மையான COVID நோய்த்தொற்றுகள் அறிகுறியற்ற, அல்லது சிறிய, அரிதாகவே குறிப்பிடத்தக்க அறிகுறிகளைக் கொண்ட நபர்களால் ஏற்பட்டன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. சில தடுப்பூசி போடப்பட்ட பயனாளிகளுக்கு இது மிகவும் பொருந்தும், அவர்கள் அறிகுறிகளே இல்லாமல் கொரோனவால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கேத் தெரியாமல் மற்றவர்களுக்கு பரப்ப வாய்ப்புள்ளது.

யாரெல்லாம் ஆபத்தில் உள்ளார்கள்?

இப்போது தடுப்பூசி பெற முடியாத, அல்லது தடுப்பூசிக்கு போட தகுதி இல்லாதவர்கள் எளிதில் தொற்றால் பாதிக்கப்படுவதற்கும், விளைவுகளால் பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்தில் உள்ளனர். இதன் பொருள் மோசமான மருத்துவ நிலைமைகள், நாள்பட்ட அல்லது மோசமான நோய் எதிர்ப்பு சக்தி 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் விருப்பத்துடன் தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சம அபாயங்களில் உள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்?

தொற்றுநோய்க்கு எதிரான நமது போராட்டத்தில் தடுப்பூசியே பேராயுதமாகும். இருப்பினும், இது சரியான சிகிச்சை அல்ல. தடுப்பூசிகள் நோய்த்தொற்று சாத்தியங்களைத் தடுக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். முற்றிலும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட அளவிலான ஆபத்துக்களை இது தடுக்கிறது. எனவே, உங்கள் தடுப்பூசியைப் பெறுவதற்கு முன்னும் பின்னும் COVID பொருத்தமான நடவடிக்கைகளைப் பின்பற்றுவது இன்னும் முக்கியமானது. மேலும் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து கடடைபிடிக்க வேண்டும்.