மட்டக்களப்பில் இன்று 750 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

மட்டக்ககளப்பில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வின்சன் பெண்கள் தேசிய பாடசாலையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று 750 பேருக்கு தடுப்பூசி எற்றப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ந.மயூரன் மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிப்பாளர் வைத்தியர் இ.உதயகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் மண்முணை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 750 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.