தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து இன்று ஓமந்தையில் விபத்து

வவுனியா – ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து இன்று அதிகாலை விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த பேருந்து வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய பயணிகளை ஏற்றிக் கொண்டு பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையிலேயே விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது பேருந்து ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை பேருந்தில் 7 பேர் பயணம் செய்த போதும் சம்பவத்தால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.