இலங்கையில் கொவிட் தொற்றால் 4 நாட்களில் 176 மரணங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் புத்தாண்டு கொவிட் கொத்தணி உருவாகி ஒன்றரை மாதங்களான நிலையில் வீடுகளில் ஏற்படும் மரணய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 4 நாட்களில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டு அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் கொவிட் அறிக்கையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இந்த மரணங்கள் இடம் பெற்ற 4 நாட்களும் இலங்கையில் தினசரி பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 40 வரை அதிகரித்துள்ளது. குறித்த 4 நாட்களில் மொத்தமான 176 மரணங்கள் பதிவாகிய நிலையில் அதில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த 176 பேரில் அதிகமானோர் கடுமையான கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலைமை காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.