நயினாதீவை தொடர்ந்து தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நிகழ்ந்த அதிசயம்

நயினாதீவை தொடர்ந்து தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நேற்றையதினம் நாக பாம்பு காட்சி அளித்துள்ளமை துர்க்காதேவி பக்தர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் திருவுருவச் சிலையில் குறித்த நாகம் அமர்ந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

இதேவேளை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை ஆலய கோபுரத்தில் நாகபாம்பு காட்சி அளித்த நிலையில் தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்திலும் நாக பாம்பு காட்சி அளித்துள்ளமை பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.